Saturday, June 20, 2009

Last-moments-of-air-france-gol-b-737

கடலில் விழுந்த ஏர் பிரான்ஸ் விமானம்: கடைசித் தருண புகைப்படங்கள்

ட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிய ஏர் பிரான்ஸ் விமானத்தில், கடைசித் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என இரு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவை உண்மையானவைத்தானா அல்லது ஏதாவது கிராபிக்ஸ் வித்தையா என்பது தெரியவில்லை.

விவரம் வருமாறு:

அட்லாண்டிக் கடலில் விழுந்து 280 சொச்சம் பேரின் உயிர்களை ஒட்டுமொத்தமாய்க் கொண்டுபோன ஏர் பிரான்ஸ் விமானம் வானில் வெடித்துச் சிதறி, பின்னர்தான் கடலில் விழுந்திருக்க வேண்டும் என்று தடய அறிவியல் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.கடலில் சிதறிக் கிடந்த உடல்களில் இருந்த காயங்களை வைத்து இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

இதுவரை 50 பயணிகளின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், விமானம் வெடித்து சிதறுவதற்கு முன்பாக எடுத்த புகைப்படங்கள் என, இரண்டு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவை பலருக்கும் இ.மெயிலில் அனுப்பப்படுவதாகவும் தெரிகிறது.

ஏதோ ஒரு காரணத்தால் பிளக்கக் துவங்கிய விமானத்தில் பயணித்த பவுலோ முல்லர் என்பவர் சில புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.

இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட கேமிரா சிதைந்துபோனாலும், அதன் மெமரி ஸ்டிக்கில் இருந்த புகைப்படங்கள் இவை எனக் கருதப்படுகிறது.

முதல் படம்: விமானத்தின் வால் பகுதியில் ஒரு ஓட்டை விழுகிறது. பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ஆக்சிஜன் மாஸ்க்கை மாட்டியுள்ளனர்.

இரண்டாவது படம். விமானத்தின் ஓட்டை பெரிதாகி விட்டது. அந்த ஓட்டை வழியே பயணி ஒருவர் வெளியே இழுக்கப்படுகிறார்.

இந்தப் புகைப்படங்கள் கேசியோ Z 750 டிஜிட்டல் கேமிராவில் எடுக்கப்பட்டுள்ளன.இந்த கேமிராவின் சீரியல் எண்ணை வைத்து விசாரித்ததில் அந்த கேமிராவுக்குச் சொந்தக்காரர் நாடக நடிகரான பாலோ ஜி. முல்லர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

விமானம் தள்ளாட்டத்தில் இருந்த நேரத்தில், விமானத்தின் உள்ளே உள்ள காற்று வெளியேறும் சமயத்தில் பயணிகளைத் தன்னுடன் இழுத்துச் செல்லும் நேரம் எப்படியோ சமாளித்து இவற்றை எடுத்திருக்கிறார். இந்தக் கேமிரா விமானத்தின் காக்பிட் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இவர் பிரேசில் நாட்டில் உள்ள போர்டோ அலிக்ரே பகுதியைச் சேர்ந்தவர்.

இந்த புகைப்படங்கள் உண்மையானவைதான் என்பதற்கு எந்த அரசுகளோ என்று எந்த ஒரு அமைப்போ ஆதாரம் தெரிவிக்கவில்லை.

No comments: